சென்னை மயிலாப்பூர் தேர் திருவிழா ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்!!

   சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடக்கிறது. 15-ந் தேதி தேர்த்திருவிழாவும், 16-ந் தேதி 63 நாயன்மார்கள் திருவிழாவும், 18-ந் தேதி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளன.

இதன் முக்கிய நிகழ்வான திருத்தோரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தைக் காண சென்னை மக்கள் மட்டுமல்லாது சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்த மக்களும் குவிந்துள்ளதால் மாட வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதினர்.

விழாவையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு கபாலீசுவரர், கற்பகம்பாள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 7.30 மணிக்கு மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வேலு, கோவில் இணை-கமிஷனர் தா.காவேரி ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அப்துல் ரஹீம் திருவல்லிக்கேணி.

Comments