கட்டட கட்டுமானப்பொருட்களின் விலை மெல்ல மெல்ல உயர்ந்து எதிர்பார்க்காத அளவிற்கு வந்துவிட்டது!!

   -MMH 

   கோவை: கட்டட கட்டுமானப்பொருட்களின் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. மெல்ல மெல்ல உயர்ந்து வந்த கட்டட கட்டுமான பொருட்களின் விலை, தற்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி, யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்து விட்டது.

இது குறித்து, கோவை மண்டல கட்டுமான பொறியாளர்கள் சங்க(கொசீனா) தலைவர் ஜெயவேல் கூறியதாவது: முன்பெல்லாம் விலை உயர்வுக்கு ஏதாவது ஒரு முக்கிய காரணம் இருக்கும். தற்போதெல்லாம் எவ்வித காரணமும் இல்லாமல், கட்டுமானப்பொருட்களின் விலையை உயர்த்திக்கொள்ளும் நிலை வந்துவிட்டது. ஒட்டுமொத்தமாக கட்டட கட்டுமான பொருட்களின் விலை, வழக்கத்தை காட்டிலும் அதிகரித்துள்ளதற்கு நியாயமான காரணங்கள் ஏதுமில்லை. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், கட்டுமானத்தொழிலே முடங்கும் நிலை ஏற்படும். அதனால் விலையை குறைப்பதற்கான வழியை கண்டறிந்து, அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு, ஜெயவேல் கூறினார். என்ன பொருள்; எவ்வளவு உயர்வு?கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் ஸ்டீல் கம்பிகள், கிலோ ஒன்றுக்கு ரூ. 52 முதல் 55 க்கு விற்றது 72 முதல் 75க்கும், சிமென்ட் 320 முதல் 350 க்கு விற்றது, 400 முதல் 450க்கும் விற்கப்படுகிறது.எம்.சேண்ட் (ஒரு யூனிட்) 2,800க்கு விற்றது 3,500க்கும், பி சேண்ட் 3,500க்கு விற்றது 4,500க்கும், முக்கால் இன்ச் ஜல்லி 2,500க்கு விற்றது 3,300க்கும்விற்கிறது. கிராவல் மண் ஒரு யூனிட் 1,500 க்கு விற்றது 2,500க்கும், செங்கல் ஒன்று 8.50க்கு விற்றது, 11.50 க்கும், பிளைஏஷ் ஒன்று 6.50க்கு விற்றது 9.00 ரூபாய்க்கு விற்கிறது. பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

-சுரேந்தர்.

Comments