கோவை ஆனைமலைஸ் டொயோட்டா, ஷோரூமில் TOYOTA GLANZA வின் புதிய மாடல் ஹேட்ச்பேக் வாகன அறிமுக விழா!!

   -MMH 

    கோவை ஆனைமலைஸ் டொயோட்டா,  ஷோரூமில்  TOYOTA GLANZA வின்  புதிய மாடல் ஹேட்ச்பேக் வாகன அறிமுக விழா நடைபெற்றது.

சொகுசு கார்களின் வரிசையில் பல்வேறு தரப்பினர்களை கவரும் வகையில் டொயோட்டா நிறுவனம் புதிய வகை க்ளான்சா மாடல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கான அறிமுக விழா கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமி்ல் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருமதி ஏசியா குயின்  சோனாலி பிரதீப் கலந்து கொண்டார். புதிய வகை க்ளான்சா குறித்து மேலாளர் கூறுகையில், புதிய கிளான்சா முந்தைய மாடலை விட அதிக மாற்றங்களை பெற்று இருப்பதோடு, ஏராளமான அம்சங்கள், மேம்பட்ட ஸ்டைலிங் மற்றும் முன்பை விட அதிக மைலேஜ் வழங்கும் என்ஜின் திறனாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,குறிப்பாக சொகுசு கார்களில் உள்ளது போன்றே அனைத்து வசதிகளையும் கொண்டு,கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன்,எளிதாக ஓட்டும் விதமாக வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். அறிமுக சலுகையுடன்,கூடுதல் சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். விழாவில்,ஆனைமலைஸ் டொயோட்டாவின் தலைமை மேலாளர்கள் மற்றும் ARC குழும நிர்வாகிகள் ,வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments