டி.வி.எச் சம்மர் நைட்ஸ் 25ம் ஆண்டு விழா! தொலைக்காட்சி பிரபலங்கள் பங்கேற்பு!!

        -MMH 

முன்னணி கட்டுமான நிறுவனமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (டி.வி.எச்) 25ம் ஆண்டு விழா டி.வி.எச் சம்மர் நைட்ஸ் என்ற பெயரில் கோவையில் சனி, ஞாயிறு 2 நாட்கள் நடைபெறுகிறது. 

நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், கோமாளி புகழ் சிவாங்கி மற்றும் செஃப் தாமு ஆகியோர் பங்கேற்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிவாங்கி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.நடன நிகழ்ச்சி, சமையல்  போட்டி, கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

காமெடியன்கள் அசார் மற்றும் டி.எஸ்.கே மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால் போன்ற பல பிரபலங்கள் விருந்தினர்கள் இன்று நடைபெறும்  நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். டி.வி.எச் திருச்சி ரோடு, சத்தி ரோடு, வடவள்ளி, கீரணத்தம் ஐ.டி பார்க்  மற்றும் தொண்டாமுத்தூரில் பண்ணை வில்லா திட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.25ம் ஆண்டை கொண்டாடும் வகையில் டி.வி.எச் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது.  டிவிஎச்  நிறுவனம் 2 இடங்களில் வீட்டு மனைகளை விற்பனை செய்கிறது.கோவை, கீரணத்தம் மற்றும் திருச்சி ரோடு மற்றும் பல பட்ஜெட் வீடுகளை விற்பனை செய்ய  உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை

ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (டி.வி.எச்)  இயக்குநர் கே.என்.மணிவண்ணன், ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (டிவிஎச்) கோவை ப்ராஜெக்ட் முதன்மை அதிகாரி ஸ்ரீதேவி ஆகியோர் செய்து இருந்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments