உறவினர்களை அழைத்து நாய்க்கு வளைகாப்பு நடத்திய தம்பதி!!

   -MMH 

   கோவை மாவட்டம் பொள்ளாச்சி,ஆனைமலை,  மீன்கரை சாலை, திவான்சாபுதூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியர்கள்  சிவக்குமார் மகாலட்சுமி மகன் சுதன்,மகள் சுகன்யா இவர்களின் வீட்டில் பொமேரியன் வகையை சேர்ந்த பெண் நாய்க்கு டாபு என்று பெயர் வைத்து வளர்த்து வந்தனர்தற்போது டாபு கர்ப்பமாக உள்ளது.

இந்நிலையில் டாபுக்கு வளைகாப்பு நடத்த சிவக்குமார் குடும்பத்தினர் முடிவு செய்தனர் இதனையடுத்து வளைகாப்புக்கு விழாவுக்கு உற்றார்  உறவினர்களை அழைத்து டாபுவை குளிப்பாட்டி புத்தாடை மற்றும் மாலை அணிவித்து அமர வைத்தனர் பின்பு புளி சாதம், பருப்பு சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் உள்ளிட்ட 7 வகையான சாப்பாடு, 5 வகையான இனிப்புகள் மற்றும் டாபுவுக்கு பிடித்த பிஸ்கட், பழங்கள் வாங்கி வைத்து டாபுவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. 

விழாவிற்கு வந்தவர்கள் டாபுவுக்கு பொட்டு வைத்து கையில் வளையல் போட்டு வளைகாப்பு விழாவை  சிறப்பாக கொண்டாடினார்கள்.

-M.சுரேஷ்குமார்.

Comments