குடிபோதையில் தம்பியை கொன்ற அண்ணன்!!

 

-MMH

   மேட்டுப்பாளையம்சிறுமுகை அடுத்த திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் சந்தானம், 55. இவரது தம்பி பாண்டி, 53. மதுவிற்கு அடிமையான இவர்கள்நேற்று மாலை இருவரும் மது ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுஆத்திரமடைந்த சந்தானம், அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து பாண்டியை குத்தி விட்டு தப்பினார்.அருகில் இருந்தவர்கள் பாண்டியை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் பாண்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமுகை போலீசார் தம்பியைக் கொன்ற சந்தானத்தை தேடி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments