பெண் டாக்டரிடம் அத்துமீறிய சிறுவன்!!

   -MMH 

   கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பெண் டாக்டர் வாக்கிங்' சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பெண் டாக்டர் இன் துப்பட்டாவை இழுத்து அநாகரிகமாக நடந்து கொண்டதாக, சிறுவன் மீது சாய்பாபா காலனி போலீசாரிடம் ஒரு புகார் தெரிவித்தார். சம்பவம் குறித்து விசாரித்த சாய்பாபா காலனி போலீசார் சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட சிறுவன், அவனது நண்பர்கள், வகுப்புத்தோழர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சுற்று வட்டார பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போலீசார் முடிவு செய்துள்ளனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments