கஞ்சா விற்பனையில் தகராறு வாலிபர் கொலை!!

   -MMH 

   கோவை கெம்பட்டி  காலனியைச் சேர்ந்த சந்தோஷ், 34,  சுரேஷ், 28, வசந்த், 32, பிரகாஷ், 32, ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும், முத்துப்பாண்டி, 23, சூர்யா, 28, சுருக்கிளி சுரேஷ், 29, சுபாஷ், 23, பாஸ்கரன்,23, ஆகியோர் இரு பிரிவினராக கஞ்சா விற்பனை செய்து வந்தனர்.

இவர்களுக்கு இடையே கஞ்சா விற்பனை, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அடிக்கடி மோதலும் ஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவு, சந்தோஷ் குழுவினர் உக்கடம் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர். அப்போது முத்துப்பாண்டி தரப்பினர் சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர்.இதில், பிரகாஷ், வசந்த் தப்பியோடி விட்டனர். இதில் சுரேஷ், சந்தோஷ் ஆகியோருக்கு பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.இருவரையும், அங்கிருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இதில் சந்தோஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுரேஷூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார், தாக்குதல் நடத்திய முத்துப்பாண்டி, சதீஷ், சுபாஷ், பாஸ்கரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments