நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தவர் தூக்கிட்டு தற்கொலை!!

 

-MMH

      கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த தீனம் பாளையம் பகுதியை சேர்ந்தவர், 73 வயதான ரங்கசாமி, இவர், மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்று கூறபடுகின்றது, இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நீரிழிவு நோய் காரணமாக, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், ஆயினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவதி பட்டு வந்ததாக கூறப்படுகிறது, இதனால் நேற்று மனமுடைந்த நிலையில் கானப்பட்ட ரங்கசாமி, அயன் பாக்ஸ் ஒயர் கொண்டு, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இதனை கண்ட இவரது மகன், 43 வயதான கனகராஜ் இது குறித்து தொண்டாமுத்தூர் காவல்நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்துள்ளார், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், ரங்கசாமி யின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!!

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Comments