சட்டம் அனைவருக்கும் சமம் நீதியை நிலைநாட்டும் காவல்துறை குவியும் பாராட்டு..!!

   -MMH 

   சென்னை பாரிஸ் பூக்கடை காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள பஸ் நிலையத்தில் இடையூறாக நிறுத்தப்பட்ட காவல்துறை வாகனம் ஒன்றை காவல்துறையினரே பூட்டி விட்டு  சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுவாக மக்கள் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளும் விதமாக காவல்துறை அதிகாரிகள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளிலும் முறையோடு நிறுத்த வேண்டுமென்று அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் வாகன ஓட்டிகள் முன்னுக்குப் பின் முரணாக வாகனங்களை நிறுத்திவிட்டு அபதாரத்துக்கு உள்ளாவார்கள். ஆனால் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற காவல்துறை கூறுகின்றது.

சென்னை பாரிஸ் பூக்கடை காவல் நிலைத்தில் எதிரே உள்ள பஸ் நிலையத்தில் இடையூறாக நிறுத்தப்பட்ட காவல் அதிகாரியின் வாகனத்தை பூட்டி வைத்த போக்குவரத்து காவலர்கள் போலீஸ் அதிகாரியின் வாகனம் என்று தெரிந்தும் அவர்கள் இச்செயலை செய்தது சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை காண்பித்து இருக்கிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

- அப்துல் ரஹீம்..திருவல்லிக்கேணி.

Comments