கோவை அருகே காட்டுயானை தாக்கி இளைஞர் பலி!

   -MMH 

   கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் காட்டுயானை தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை காப்புக்காடு அருகே பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத அண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சிறுமுகை வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, தலை நசுங்கிய நிலையில் கிடந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், உயிரிழந்த நபர் யார்? என்பது குறித்து சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில்,  அந்த நபர் சிறுமுகை ஆலக்கொம்பு விஸ்கோஸ் காலனியை சேர்ந்த சந்திரசேகர் மகன் நவீன்குமார் (27) என தெரிய வந்தது. மேலும், இவர் நேற்றிரவு பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு சென்று மதுஅருந்திவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது, ஒற்றை காட்டு யானை அவரை தாக்கி, தலையில் மிதித்து கொன்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments