வால்பாறையில் நிலத்தடி நீரை மோட்டார் வைத்து உறிஞ்சு பவர்களை கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்..!!

    -MMH 

  கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவில் உள்ள வால்பாறை எழில் சூழ்ந்த இயற்கை வனமாகவும், மலைகளின் இளவரசி யாகவும் காட்சியளிக்கும் இந்த வால்பாறை 56 எஸ்டேட்டுகள் உள்ள நிலையில்  வால்பாறை குடியிருப்பு பகுதியில் உள்ள மக்களுக்கு தண்ணீர் சிலநேரங்களில் கேள்வி குறியாக உள்ளது.  இது ஒருபுறமிருக்க சிறுவர் பூங்கா பகுதியில் மின் மோட்டார் வைத்து  தண்ணீரை அங்கிருக்கும் ஒரு சில காட்டேஜ் குடியிருப்புகளுக்கு அதிக அளவில் உறிஞ்சி எடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன இதை சம்பந்தப்பட்ட துறைகளிடம் மக்கள் எடுத்துக்கூறியும் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனடியாக சரி செய்து  தடுக்க வேண்டும் என்றும் இந்த நிலை நீடித்தால் மாவட்ட கலெக்டரை அணுகி மனு கொடுக்க போவதாகவும் தண்ணீரை  உறிஞ்சுவதை தடுத்து வால்பாறை நிலத்தடி நீரையும் மக்களையும்  காக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

- ராஜேந்திரன்,அலாவுதீன்.

Comments