சாதித் தலைவர் அல்ல அம்பேத்கர் ஒட்டுமொத்த சமூகத்திற்கான தலைவர் பொள்ளாச்சியில் திருமுருகன் காந்தி ஆவேசம்..!!!

   -MMH 

  ஏப்ரல் 14 சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை  தமிழகஅரசு சமத்துவ நாளாக அறிவித்துள்ளது பொள்ளாச்சி அண்ணாபேருந்து  அருகில்  மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஏற்பாடு செய்திருந்த அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வில் உரையாற்றிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இந்திய அரசியல் நிகழ்வுகள் பற்றியும், அம்பேத்கர் சாதி தலைவர் அல்ல ஒட்டுமொத்த சமூகத்திற்கான தலைவர் என்றும் அம்பேத்கரின் இன்றைய தேவை பற்றியும் கண்டன உரையாற்றினார்.

மேலும் கேரள மாநில அமைப்பாளர் தோழர் விலையோடி சிவன் குட்டி அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார் அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி காந்தி சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது மேலும் ஆனைமலை கோட்டூர், ஊத்துக்குளி பல பகுதிகளில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நாளை வரலாறு செய்திகளுக்காக.   

-அலாவுதீன் ஆனைமலை.

Comments