மனைவியை கொன்ற கணவன் கைது!!

    -MMH 

     கோவை சுந்தராபுரம், காமராஜர் நகரை சேர்ந்தவர் நாகார்ஜூன் 30. ஆட்டோ டிரைவரான இவரும், அன்னை இந்திரா நகரை சேர்ந்த ஷர்மிளா 27 என்பவரும் காதலித்து, மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் காந்திநகர் மூன்றாவது வீதியில், வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். ஷர்மிளா, சில நாட்களாக அடிக்கடி மொபைல் போனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. குடிப்பழக்கம் கொண்ட நாகார்ஜூனுக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று மதியம் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த நாகார்ஜூன் குடிபோதையில் ஷர்மிளாவை கத்தியால் குத்தியதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இச்சம்பவம் குறித்து போத்தனுார் போலீசில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் சடலத்தை மீட்டு, நாகார்ஜூனை கைது விசாரித்து வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு

Comments