கோவை கொடிசியா அரங்கில் தண்ணீர் தொழில்நுட்பம் சார்ந்த, 'வாட்டர் இன்டெக்' கண்காட்சி துவங்கியது!!

   -MMH 

   கோவையில் நடைபெற்ற வாட்டர் டெக் கண்காட்சியில் கிராம் என்வோ சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் ப்ளூம் பாக்ஸ் நீர் மறுசுழற்சி தொழில் நுட்பம் உட்பட பல்வேறு விதமான நீர் சுத்திகரிப்பு மற்றும் தொழில் நுட்ப உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கோவை கொடிசியா அரங்கில் தண்ணீர் தொழில்நுட்பம் சார்ந்த, 'வாட்டர் இன்டெக்' கண்காட்சி  துவங்கியது. இரண்டு வருடங்களுக்கு பின்பு நடைபெறும் இதில்,இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நீர் சுத்திகரிப்பு,மறுசுழற்சி,என நீர் மேலாண்மை தொடர்பான பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தோர் கலந்து கொண்டனர். பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் சார்பிலும், தொழில்நுட்பங்கள் காட்சிப் படுத்தப் பட்டிருந்தன. இதில் கிராம் என்வோ சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் அரங்கில் ப்ளூம் பாக்ஸ் எனும் நகரும் தொழில்நுட்பத்திலான நீர் சுத்தகரிப்பு இயந்திரத்தை பல்வேறு தரப்பினரும் பார்வையிட்டனர்.இது குறித்து நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராஜமாணிக்கம் கூறுகையில்,தற்போது சந்தித்து வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு சவாலை எதிர் கொள்ளும் விதமாக எங்கள் நிறுவனம் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் தொழில்நுட்ப கருவிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும், ப்ளூம் பாக்ஸ்  இயந்திரத்தைத் தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள், நட்சத்திர விடுதிகள், வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள் எனப் பல இடங்களிலும் பொருத்தலாம் எனவும்,கோவை போன்ற ஸ்மார்ட் சிட்டி நகரங்களில்  கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பொருத்துவதன் மூலம் குடிநீர் தவிர்த்துத் தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவது போன்ற தேவைகள் என 70 சதவீதம் நீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்த முடியும் என தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments