நேற்று தேசத்தில் தலைப்பு செய்தியாக மாறிய இரண்டு கட்சி தலைவர்கள்!!

 

-MMH

 ஒருவர்  காங்கிரஸ் கட்சியின் கபில்_சிபல் இரண்டாமவர் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பிருந்தாகாரத். தில்லி  ஜஹாங்கீர்புரி பகுதியில் இஸ்லாமிய குடியிருப்புகளை ஆக்ரமிப்புகள் என்ற பெயரில் உடைப்பதற்காக திட்டமிட்ட தில்லி மாநகராட்சியின் நாசகார சதி திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கினார் காங்கிரஸ்  தலைவர் கபில் சிபல்.

அந்த தடை உத்தரவை எங்கள் முடிக்கு சமம்  என்று #BJP ஆளும் தில்லி மாநகராட்சியும்  அமித்ஷாவின் காவல்துறையின் உதவியோடு ஜஹாங்கீர்புரியின் பள்ளிவாசல்கள் உட்பட உடைக்க துவங்கியபோது, அந்த புல்டோசர்களின் முன்னால் உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவை காட்டி இடிக்க விடமாட்டோம் என்று நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்றார் தோழர் பிருந்தா காரத். ஆங்கிலேய சர்வாதிகாரத்தை மிஞ்சும் சங்கிபரிவார்களின்  சர்வாதிகாரத்தை எதிர்த்து நின்று தோற்கடிக்க எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நின்றால் சாத்தியமே என்பது தான் இந்த சம்பவங்கள் சொல்லும் செய்தி!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments