பாரத் பெட்ரோலியம் மற்றும் ஆல்வாமருத்துவ மனை சார்பாக இலவச மருத்துவ முகாம்...!!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சுபாளையம் பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீராம் பெட்ரோல் பங்கில் பாரத் பெட்ரோலியம் மற்றும் ஆல்வாமருத்துவமனை சார்பாக 'உங்களின் மகிழ்ச்சி! எங்களின் அக்கறை'! என்ற விழிப்புணர்வு மருத்துவ முகாம் ஏப்ரல் 25ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவின் பரிசோதனை போன்ற பரிசோதனைகள் பொதுமக்களுக்கு இலவசமாக பார்க்கப்பட்டது. இந்த மருத்துவ முகாம் ஸ்ரீராம் குழுமத்தின் ஆதித்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நாளையவரலாறு செய்திகளுக்காக
-அலாவுதீன் ஆனைமலை.
Comments