ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா...!!!

   -MMH 

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் முப்பெரும் விழா ஏப்ரல் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் முதலாவதாக, சென்னையில் நடைபெற்ற  மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் கலந்துகொண்டு அந்தப் போட்டியில்  ஓவர் ஆல் சாம்பியன் பட்டம் வென்ற ஜமீன் ஊத்துக்குளி யைச்  சேர்ந்த சுலைமான் அவர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்பிற்கு தயாராகும் நபர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான  நூல்கள் நூலகத்திற்கு 7வது வார்டு கவுன்சிலர் சார்பாக வழங்கப்பட்டது. அதனை அடுத்து ஜமீன் ஊத்துக்குளி 7வது வார்டு கவுன்சிலர் சார்பாகவும் ஆனைமலை ஆலம் விழுது குழுவினர் சார்பாகவும்  ஜமீன் ஊத்துக்குளி  மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அப்பொழுது பதாகைகளை ஏந்தி மரம் வளர்ப்போம் இயற்கையைக் காப்போம் என்ற கோஷங்களுடன் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அதன்பின்பு ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு சிறப்பான முறையில்  பராமரித்து செய்து வரும் ஆனைமலை ஆலம் விழுது குழுவினர்களுக்கு ஜமீன் ஊத்துக்குளி 7வது வார்டு கவுன்சிலர் சார்பாக கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.  இந்த முப்பெரும் விழா ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் அகத்தூர்சாமி அவர்கள் தலைமையிலும் நீர்ப்பாசனத் தலைவர்  ராம்மனோகர் காளிதாஸ் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆனைமலை ஆலம் விழுது குழுவினர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர். இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஜமீன் ஊத்துக்குளி 7வது வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.  

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-அலாவுதீன் ஆனைமலை.

 


  

Comments