சிவன் கோயில் செல்லும் வழியில் மண்சரிவினால் பக்தர்கள் அவதி! சரி செய்ய கோரிக்கை..!!

     -MMH 

   திருச்செங்கோடு உலகப் புகழ் பெற்ற அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோவில்  நேற்று பலத்த மழையின் காரணமாக நேற்று இரவில் பக்தர்கள் செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் காலை முதல் கோவிலுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள் பக்தர்கள். இதனால்  கோவிலின் பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆகையால்உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு கற்களை அகற்றி தரவேண்டுமென்று பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ரஞ்சித் குமார்,.திருச்செங்கோடு.

Comments