தக்காளி விலை கிடுகிடு உயர்வு!

 

-MMH

    கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  சந்தைக்கு தக்காளி வரத்து பெருமளவில் குறைந்துவிட்டது இதன் காரணமாக தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்து உள்ளது.   கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக 20 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானது. தற்போது சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments