மே 24ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்!!

 

   டெல்டா குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் அதிகனழையால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை நிலவரப்படி வினாடிக்கு 29,984 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 47,878 கன அடியாக  அதிகரித்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து நிலையில் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நேற்று காலை 10மணியளவில் 110 அடியாக இருந்தஇன்று காலை 115.10அடியாக உயர்ந்துள்ளதால்
இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணையின் முழு கொள்ளவான 120 அடியை எட்டிவிடும் இதனால் அணைத்திறப்பு பற்றி கேள்வி எழும்முன்பே
வருகின்ற மே 24ம் தேதி செவ்வாய்கிழமை சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மே 23ம் தேதி திங்கட்கிழமை
சேலம் விமான நிலையத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  வருகை தருகிறார் அங்கிருந்து கார் மூலம் மேட்டூர் சென்றடைந்து மே 24ம் தேதி காலை டெல்டா குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்துவைக்கவுள்ளார்.
இதனால் திருச்சி தஞ்சை புதுக்கோட்டை திருவாரூர் நாகை அரியலூர் பெரம்பலூர் கடலூர் ஆகிய மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறுவார்கள் மே மாதத்தில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது இதுவே முதல்முறை எப்போதும் ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதியன்று டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு இதழுக்காக
-கலையரசன் , மகுடஞ்சாவடி.


Comments