ஒருதலை காதல் காரணமாக பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை!!

    -MMH 

    கோவை குனியமுத்தூர் செந்தமிழ்நகரை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி கிறிஸ்டினா. இவர்களது மகன் 17 வயதான சக்திவேல், கோவையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் தனது மனைவி கிறிஸ்டினா மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றார். இதனால் கிறிஸ்டினா வேலைக்கு சென்று குழந்தைகளை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர் தனது மகள் நர்சிங் படிப்பில் சேர்ப்பதற்காக நேற்று முன்தினம் கோவையில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரிக்கு சென்றார். வீட்டில் சக்திவேல் மட்டும் தனியாக இருந்தார்.

இதனால் கிறிஸ்டினா தனது மகனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் அதை எடுத்து பேசவில்லை. பல முறை தொடர்பு கொண்டபோதும் அவர் எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தனது மகளுடன் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டின் முன்கதவு பூட்டிக் கிடந்தது. அவர் பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அங்குள்ள மின்விசிறியில் சக்திவேல் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த குனியமுத்தூர் போலீசார் விரைந்து சென்று சக்திவேல் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே சக்திவேல் வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதில் நீ. என்னை புரிந்து கொள்ளவில்லை. என்னை வெறுக்கிறாய். நான் உன்னுடன் பேசும்போது என்னுடன் பேசுவது இல்லை. நான் இல்லை என்பதுதான் எனது அருமை தெரியும் என்று எழுதப்பட்டு இருந்தது.

அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில், சக்திவேல், ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்தது தெரிய வந்தது. ஆனால் அந்த மாணவி அவரை காதலிக்க மறுத்ததோடு, பேசாமல் வந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சக்திவேல் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments