டெங்கு கண்டறிய 300 பரிசோதனை மையங்கள்.. தடுப்பு பணியில் 21000 பணியாளர்கள்!! - அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்.

   -MMH 

   டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்வு ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்துக்கொண்டு உரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு முழுவதும் தேசிய டெங்கு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்களிடம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏற்பட்ட டெங்கு பாதிப்பை மனதில் கொண்டு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடக்கம். கடந்த 2012, 2015, 2017 கால கட்டத்தில் டெங்கு வைரஸ் அதிக உயிரிழப்புகள் ஏற்படுத்தியது. அதிகபட்சமாக டெங்குவிற்கு 65 பேர் 2017 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்கள்.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வீடு தோறும் சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை கண்டறிய 125 இருந்த மையங்கள் இருந்தன. ஆனால் இன்று 300 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.300 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. 21000 பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.கொசுக்களை ஒழிக்க தேவையான மருந்து கையிருப்பில் உள்ளது. தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

2017 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக இழப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த 2022 ஆண்டு தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் இன்னும் உயிரிழப்பு இல்லை. கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தருமபுரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னையில் கடந்த 5 மாதங்களில் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. என்றார்.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments