சேத்துமடை மணக்கடவு அம்மன் திருக்கோயில் 9 வது ஆண்டு நிறைவு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம்!

   -MMH 

   கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த சேத்துமடை கிராமம்  டாப்சிலிப் செக்போஸ்ட் அருகே மலை அடிவாரத்தில்  அமைந்திருக்கும் அருள்மிகு ஓம் சக்தி மணக்கடவு அம்மன் திருக்கோயில் 9 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று மிகச் சிறப்பாக  நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு ஓம் சக்தி மணக்கடவு அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் பெற்றனர். அதே சமயம் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பாக  அன்னதானம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக 

- சஞ்சய் சேத்துமடை.

Comments