வேலூரில் இருந்து சென்னை வந்த இதயம்!

   -MMH 

    வேலூரிலிருந்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு1மணி நேரம் 35 நிமிடங்களில் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தினகரன் (21)என்ற இளைஞர்  கடந்த 29-ம் தேதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்த அவருக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து இளைஞரின் உடல் உறுப்புகளை உறுப்பு தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு எடுத்த நிலையில் அவருடைய சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட பாகங்கள் அதே மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டது.

அதனையடுத்து இதயம் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள நோயாளி ஒருவருக்கு தேவைப்பட்ட நிலையில் தமிழக உடல் உறுப்பு ஆணையம் அவருக்கு இதயத்தை பொருத்த ஆணை பிறப்பித்தது.அதனை தொடர்ந்து மதியம் 3 மணி அளவில் இதயம் பிரத்யேக பெட்டியில் வைக்கப்பட்டு. ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டது வேல்முருகன் என்பவர் ஆம்புலன்சை இயக்க வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு 1 மணி நேரம் 35 நிமிடங்களில் கொண்டுவரப்பட்டது. இதற்கு ஆம்புலன்ஸ் வரும் வழிகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் போக்குவரத்து போலீசார் திறம்பட செயலாற்றிய நிலையில் கூட்டு முயற்சியின் பலனாக சரியான இன்று மாலை 4:35மணிக்கு இதயம் சென்னைக்கு வந்து சேர்ந்தது. 

-P. இரமேஷ் வேலூர்.

Comments