தக்காளி விலை கிடுகிடு உயர்வு!!

   -MMH 

   கிணத்துக்கடவு சுற்றுப்புற பகுதியில் தக்காளி அறுவடை நடந்து வருகிறது. கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு ஆந்திரா மற்றும் சில பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தொடர் மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு தக்காளி வழக்கத்தை விட குறைவாக விற்பனைக்கு வந்தது. வரத்து குறைவால் தக்காளி கிலோ ரூ.86-க்கு ஏலம் போனது. ஆப்பிள் தக்காளி ரூ.95 வரை விற்பனையானது. காய்கறி சந்தையில் தக்காளி அதிக விலைக்கு ஏலம் போனதால், சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி விலை கிடு, கிடு என உயர்ந்து உள்ளது.

இந்த விலை உயர்வால் தக்காளி விலை அதிகரித்து உள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments