ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

   -MMH 

   தமிழகத்தில் வருகின்ற ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பையோட்டி பள்ளிகளில் 2022 – 2023 ம் கல்வியாண்டிற்கான அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். 

இந்த ஆண்டில் பள்ளி ஆசிரியர்களின் வேலை நாள் 210ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான செயல்பாடுகளையும் கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. இது குறித்து  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் 2022 - 2023 கல்வியாண்டில் கோவிட் 19 கால அட்டவணை இல்லாமல் வழக்கமான பள்ளி வகுப்புகள் நடைபெறும்.

மாண்புமிகு தமிழக முதல்வரின் புதிய திட்டமான அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள பள்ளிகளில் சோதனை அடிப்படையில் தொடங்கி பிறகு தமிழகம் முழுவதும் முழுமையாக செயல்படும் என்று தெரிவித்தார்.



மேலும்அடுத்த கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணையில் பள்ளி வேலை நாட்களை மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளது தற்போது வரும் கல்வியாண்டில் பள்ளி ஆசிரியர்களுக்கு 210 நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விடுமுறை, வார விடுமுறை ஆகியவற்றை சேர்த்து 148 நாட்கள் விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 7 நாட்கள் இதர பணி நாட்களாக செயல்படும் என்று தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக

-ச.கலையரசன்,மகுடஞ்சாவடி.

Comments