மகாராஷ்டிரா வங்கியின் விரிவான சேவை குறித்த செயல் விளக்க கூட்டம் கோவையில் நடைபெற்றது!!

   -MMH 

   கோவையில் மகாராஷ்டிரா வங்கியின் விரிவான  சேவை குறித்த செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் கொங்கு மண்டல மாவட்டங்களை சேர்ந்த சிறு குறு தொழில் மற்றும் ஏற்றுமதியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சிறு குறு தொழில்,நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி வணிகத்தில் வங்கிகள் சார்ந்த கடன் உதவி,மற்றும் தொழில் முன்னேற்றத்தில் வங்கிகளுடான செயல்பாடு குறித்த செயல் விளக்க கூட்டம் சென்னை மண்டல மகாராஷ்டிரா வங்கி சார்பாக கோவையில் நடைபெற்றது. கோவை சின்னயம்பாளையம் பகுதியில் உள்ள தனியார்  ஹோட்டலில் நடைபெற்ற இதில் திருப்பூர், கோவை, சேலம், கரூர், ஈரோடு,நாமக்கல்  உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த சிறு குறு ,  நடுத்தர   தொழில் முனைவோர் மற்றும் ஏற்றுமதி வணிக  நிறுவனங்களை சேர்ந்தவர் கள் கலந்து கொண்டனர். 

சென்னை மண்டல பொது மேலாளர் ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினர்களாக பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் செயல் இயக்குனர் ஆசிஷ் பாண்டே, கருவூலம் மற்றும் சர்வதேச வங்கிப் பிரிவின் பொது மேலாளர், ஸ்ரீ சங்க்பால் தினகர் பாபுராவ் ,கோவை மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் கார்த்திகைவாசன் மற்றும் திருப்பூர் இ.சி.ஜி.சி நிறுவனத்தின் உதவி பொது மேலாளர். ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம் நாட்டின்  பொருளாதாரத்திற்கு கிடைக்கும் லாபம் நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் பொருளாதார மாற்றத்தை உந்துவதில் ஏற்றுமதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதற்கு வங்கி சார்ந்த உதவிகளை தொழில் முதலீட்டாளர்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும் எனவும்,மேலும் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்காக  வட்டி மானியம் மற்றும் இதர சலுகைகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக தெரிவித்தனர். சிறு குறுந்தொழில்களை ஊக்குவிப்பதற்காக தொழில்முனைவோருக்கு அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் மானியங்களை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments