கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; பா.ஜ.க. நிர்வாகி வழங்கினார்!!!

   -MMH 

    தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள ஏ பி முருகானந்தம் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதனை ஒட்டி அக்கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகி வி எம் ராஜன் சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கான பட்டங்களும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

" பிறந்த நாள் கொண்டாடும் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், தேசிய துணை தலைவராக பதவி வகித்து பல்வேறு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றி பா.ஜ.க வின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். பா.ஜ.க வின் உண்மை தொண்டராகவும் சிறந்த தலைவராக விளங்குகிறார். மேலும் அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் ஏழை குழந்தைகள் பயன்பெறும் வகையில் தங்க மோதிரம் பரிசாக வழங்கியுள்ளதாகவும், குழந்தைக்கு தேவையான பொருள்கள் அடங்கிய பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது". இவ்வாறு அவர் கூறினார். 

இந்நிகழ்ச்சியில் கலை, கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் முரளி, உக்கடம் ஜோதி, சார்லஸ் சிங், சந்தோஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

- சீனி,போத்தனூர்.

Comments