கோவை புரூக்பீல்ட் மாலில் மூன்று வகையான தனித்தனி அம்சங்கள் கொண்ட ரெஸ்டாரெண்ட் 'ஒரே கூரையின் கீழ்' துவக்கம்!!

   -MMH 

   கோவை புரூக்பீல்ட் மாலில் எஸ்.பி. குளோபல் எண்டர்பிரைஸ் சார்பாக டோனி அண்ட் கை எசன்சுவல்ஸ்,சுல்தான்ஸ் பிரியாணி,ஜோனாஸ் பிஸ்ட்ரோ,ஹோட்டல் பொன்னுசாமி எலைட் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் துவக்கம்.

எஸ்.பி.குளோபல் எண்டர்பிரைசஸ் சார்பாக தமிழகத்தில்  சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் பல்வேறு புதிய தொழில் முதலீடுகளை தொடர்ந்து செய்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். அந்த  வகையில் கோவை புரூக் பீல்டு வணிக வளாகத்தில் 6000 சதுர அடியில்,பிட்சா, பர்கர் மற்றும் இத்தாலியன் என மேற்கத்திய உணவு வகைகளுக்கென ஜோனாஸ் எனும் பிஸ்ட்ரோ ரெஸ்டாரெண்ட், பல்வேறு வகையான பிரியாணிக்கென சுல்தான்ஸ் பிரியாணி,உலக அளவில் செட்டிநாட்டு உணவு வகைகளுக்கு பிரபலமான பொன்னுசாமி எலைட் ஓட்டல் என மூன்று வகையான தனித்தனி அம்சங்கள் கொண்ட ரெஸ்டாரெண்ட் ஒரே கூரையின் கீழ் துவங்கப்பட்டுள்ளது. 

கோவை வாழ் மக்களுக்கு புதிய அனுபவத்தை தரும் இந்த உணவகங்களின் துவக்க விழா மற்றும் அதன் அருகிலேயே துவங் கி உள்ள டோனி அண்ட் கை எசுன்சுவல் துவக்க விழா புரூக் பீல்டு மாலில் உள்ள ஃபுட் கோர்ட் அருகில்  வெகு விமரிசையாக நடைபெற றது. வி.ஆர்.ஏட்ஸ் வினோத் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில் பால்சன்ஸ் குழுமத்தின் இயக்குனர் சாம் பால், தலைமை செயல் அதிகாரி ப்ளெஸ்ஸிங் மணிகண்டன்,எஸ்.பி.குளோபல் எண்டர் பிரைசஸ் நிறுவனர் ப்ரவீண் மணி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு மூன்று உணவகங்களையும் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் உணவகங்கள் குறித்து கூறுகையில்,இங்கு வரும் உணவு பிரியர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் விதமாக மூன்று வெவ்வேறு விதமான ரெஸ்டாரெண்டுகளை ஒரே இடத்தில் துவக்கி உள்ளதாகவும்,செட்டிநாடு சைவ மற்றும் அசைவ உணவு வகைகள், மேற்கத்திய உணவு வகைகள்,உயர் தர பிரியாணி என அனைத்து வகையான உணவுகளும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில்  இதனை துவங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

உலக அளவில் செட்டிநாடு உணவுகளுக்கு பிரபலமான பொன்னுசாமி ஓட்டல்,மேற்கத்திய உணவிற்கு தனி முத்திரையாக செயல்படும் ஜோனாஸ் பிஸ்ட்ரோ,பிரியாணி அதற்கும் மேலே என கூறப்படும் சுல்தான்ஸ் பிரியாணி என உணவுகளின் அனைத்தும் ஒரே இடத்தில் சங்கமித்துள்ள உணவகம் கோவை வாழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

- சீனி,போத்தனூர்.

Comments