தக்காளி காய்ச்சல் எதிரொலி வீடு வீடாக கண்காணிப்பு!!

     -MMH 

     கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இதில் குழந்தைகள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தக்காளி காய்ச்சல் அதிகம் பாதிக்கிறது.

கேரளாவில் இருக்கும் தக்காளி காய்ச்சல் தமிழகத்தில் பரவும் வாய்ப்பு உள்ளதால் தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.

தமிழக -கேரள எல்லை பகுதியில் உள்ள  சோதனைச்சாவடியில் கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் நபர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என சுகாதார ஆய்வாளர்கள் பரிசோதனை செய்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க  வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments