கோவையில் பிஎஃப் பணம் கையாடல் செய்தி அதிகாரிகள்!!

     -MMH 

கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மண்டல பி.எப்.அமலாக்கப்பிரிவு அதிகாரி மைதிலி தேவி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் தொழிலாளர்களின் பணம் கையாடல் நடைபெற்றுள்ளதாகக் கோவை பந்தய சாலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் கோவை பி.எப். நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றிவரும் அந்தோணி குருதி என்பவர் கோவையில் உள்ள 2 தனியார் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் பணியாற்றும் 28 ஊழியர்களின் பி.எப். பணத்தை வேறு சிலரின் வங்கி கணக்குகளுக்கு சட்டவிரோதமாக மாற்றி உள்ளது தெரியவந்தது.

இதனால் தனியார் நிறுவன ஊழியர்களின் பி.எப். பணத்தை கையாடல் செய்து மோசடி செய்த அந்தோணி குருதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பந்தய சாலை போலீசார் அந்தோணி குருதி மீது இந்திய தண்டனைச் சட்டம் 406,465 மற்றும் 468 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் தேடுவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அந்தோணி குருதி தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், I. அனஸ்.

Comments