கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்!!

    -MMH 

   கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான  அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் மே 29 முதல் ஜுன் 3, வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.

கடந்த 54 ஆண்டுகளாக ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி மற்றும் 18 வருடங்காளாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றது. 

இப்போட்டிகளில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள அணிகள் பெருமையுடன் கலந்து கொள்வார்கள். இப்போட்டிகள் மே 29 - ந் தேதி முதல் ஜுன் 3 - வரை 6 நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் திரு. ஜி. செல்வராஜ் கூறியதாவது :- "ஆண்கள் பிரிவில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள முன்னணி அணிகள் தேர்வு செய்யப்பட்டுளனர்.  இதில் ஆண்கள் பிரிவில்;-

புது டெல்லி - இந்தியன் ரயில்வே அணி, 

புது டெல்லி - இந்திய விமானப்படை அணி, 

லோனாவாலா - இந்திய கப்பல் படை அணி, 

திருவனந்தபுரம் - கேரளா மாநில மின்சார வாரியம் அணி, 

பெங்களூரு – பாங்க் ஆப் பரோடா அணி, 

சென்னை - ஸ்போர்ட்ஸ் ஹால்டல் அஃப் எக்ஸலன்ஸ் அணி, 

சென்னை - தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் TRW அணி, 

திருவனந்தபுரம்- கேரளா போலீஸ் அணி மற்றும் 

கோயம்புத்தூர் - கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி  ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.

நாளைய வரலாறு செய்திக்காக,

- சீனி,போத்தனூர்.

Comments