பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தொடங்கியது!!

    -MMH 

   கோவை பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பணியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரேணுகா தொடக்கி வைத்தனர். ஆசிரிய பயிற்றுனர்கள் ராஜேஸ்வரி, பாக்கியலட்சுமி, திருமகள் இளங்கோ, நித்யா மற்றும் சிறப்பு கல்வி ஆசிரியர்கள் தேன்மொழி, ராணி ஸ்ரீபிரியா, இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர்கள் ஆகியோர் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதில், 3 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்கள் யாரேனும் பள்ளி செல்லாமல் உள்ளார்களா, பள்ளி இடைநின்றவர்கள் யாரும் உள்ளார்களா, புலம் பெயர்ந்து வந்தவர்களின் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படாமல் உள்ளதா என்பன போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். இதில் தகுதி உள்ளவர்கள் ஜூன் மாதத்தில் அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். தற்போது நஞ்சுண்டாபுரம், சின்னத்தடாகம், பன்னிமடை ,தூடியலூரில் உள்ள அண்ணா காலனி, புதுமுத்துநகர், சந்தைப்பேட்டை ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

இந்தக் கணக்கெடுக்கும் பணி ஜூன் 10-ந் தேதி வரை நடைபெறும்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.



Comments