சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது!!

 

-MMH

போத்தனூர் செட்டிபாளையம் அருகே சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கோவையை சேர்ந்தவர் குப்புச்சாமி (வயது 63). இவருடைய வீட்டின் அருகே 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்தான்.அந்த சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற  குப்புச்சாமி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

சிறுவன் அழுது கொண்டே தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார் அதிர்ந்து போன பெற்றோர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். அதன்பேரில் செட்டிபாளையம் போலீசார் குப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments