கோவையில் காச நோய் வகைகளைக் கண்டறிய ஆய்வகம்!!

    -MMH 

    கோவை நாடு முழுவதும் காச நோயை, 2025ம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கு மத்திய அரசின்கீழ், தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 'ஜீன் எக்ஸ்பெர்ட்' ஆய்வகங்கள் செயல்பட்டுவருகின்றன.ஆரம்ப நாட்களின் காச நோயாளிகளின் தன்மை, பரிந்துரைக்க வேண்டிய மருந்துகள் குறித்த தகவல்களை அறிய நோயாளிகளின் மாதிரிகள், சென்னையில் உள்ள ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பட்டு வந்தன. பரிசோதனை முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருந்ததால், நோயாளிகளுக்கு தேவையான மருந்து, ஆலோசனை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுவந்தது. இந்நிலையில், நோயாளிகளின் வசதிக்காக கோவை அரசு மருத்துவமனையில் இடைநிலை குறிப்பு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

சோதனை முறையில் இந்த ஆய்வகத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் நாட்களில் அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளும் வகையில், இந்த ஆய்வகம் முழு பயன்பாட்டுக்கு வரவுள்ளதால், நோயாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments