கோவையில் 4 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்!!

     -MMH 

கோவை மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம், எஸ்.ஐ., குப்புராஜ் உள்ளிட்டோர் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் நேற்று முன்தினம் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போடிபாளையம் சாலையில் வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

போடிபாளையம் சாலையில் வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் புகையிலை பொருட்களை கேரளாவிலிருந்து  வாங்கி வருவது தெரியவந்தது. 

இந்த புகையிலைப் பொருள்களின் மதிப்பு 4லட்சம்  வரை இருக்கும். இதனைத் தொடர்ந்து வாகனம் ஓட்டி வந்த ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர் மேலும் இவருக்கு புகையிலை பொருட்களை கேரளாவிலிருந்து வாங்கி தரும்  அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments