ஆட்டோ வேன் மோதி விபத்து!! கர்ப்பிணி பெண் உட்பட 5 பேர் காயம்...!!!
ஐயர்பாடி எஸ்டேட்டை சேர்ந்த மணிகண்ட பிரபு, இவர் தனது மனைவி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதால், பொள்ளாச்சி உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக முனியாண்டி என்பவரது ஆட்டோவில் ஐந்து பேர் ஐயர்பாடி எஸ்டேட்டில் இருந்து பொள்ளாச்சியை நோக்கி புளியங் கண்டி அருகே வரும்பொழுது, கோவையைச் சேர்ந்த மாதவன் என்பவர் ஈகோ வேனில் வால்பாறை எஸ்டேட்டுக்கு கண்ணாடிகளை ஏற்றி செல்லும் பொழுது எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியதில், கர்ப்பிணி பெண் உட்பட 5 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது.
இதில் ஆட்டோ ஓட்டுனர் முனியாண்டிக்கு முகம் மற்றும் கை கால் தோள்பட்டை பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனை அடுத்து ஆழியார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் விபத்தில் காயமடைந்த நபர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.
Comments