சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் சி.பி.எஸ்.இ., பள்ளி 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் யோகாசனம் குறித்த விழிப்புணர்வு!!

 -MMH 

சர்வதேச யோகா தினத்தை  முன்னிட்டு கோவையில் சி.பி.எஸ்.இ., பள்ளி ஒருங்கிணைப்பு சகோதயா சார்பாக 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் யோகாசனம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு,இந்தியா மட்டுமின்றி,உலகம் முழுவதும் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளி ஒருங்கிணைப்பு சகோதயா காம்ப்ளக்ஸ் சார்பாக கோவை நேரு ஸ்டேடிய அரங்கில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.

பொது செயலாளர் கீதா லஷ்மண்,நிர்வாக உறுப்பினர் நவமணி,தலைவர் சுகுணா தேவி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,சிறப்பு விருந்தினராக அறம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் லதா சுந்தரம் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் கோவை,காரமடை,மேட்டுப்பாளையம்,திருப்பூர் உள்ளிட்ட சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம் கொண்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில்,பல்வேறு யோகாசனங்கள் குறித்த பயன் மற்றும் ஆரோக்கிய வாழ்வில் யோகாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில,மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன்,செயற்குழு உறுப்பினர் அபிஷேக்,உட்பட,நேசனல் மாடல்,சுகுணா ரிப்,பெங்க்லன் பப்ளிக் பள்ளி உட்பட ஐம்பத்தாறு பள்ளிகளை சேர்ந்த யோகாசன ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments