'என் குப்பை என் பொறுப்பு' என்ற திட்டத்தின் அடிப்படையில் தூய்மைப்படுத்தும் பணிகள் துவக்கம்!!

   -MMH 

     உடுமலை: (11/06/2022) தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க நகரப்புறங்களில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் 'என் குப்பை என் பொறுப்பு' என்ற திட்டத்தின் அடிப்படையில்  இன்று தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட பூக்கடை கார்னர் வீதியில் இருந்து பொள்ளாச்சி ரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை தூய்மைப்படுத்தும் பணியை  தொடங்குவதற்கு முன் துப்புரவு பணியாளர்கள் உறுதிமொழி ஏற்று தூய்மைப்படுத்தும் பணியை தலைமையில் தொடங்கி வைத்தார்.  

நகர மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்பு கண்ணன் ME(Str).,LLB.,  நகராட்சி ஆணையாளர் ராமர், நகர மன்ற துணைத் தலைவர் ரவிசந்திரன்  மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் சக்திவேல்,துரை.சந்திரசேகர்,புனிதா சக்திவேல், முத்துலட்சுமி, செலின் பிலோமீனா,உமா மகேஸ்வரி மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சரத்குமார்,ஹரிஹரசுதன் மற்றும் கழக உடன் பிறப்புகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்  கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments