நபிகள் நாயகத்தை அவதூறாக செய்தி பரப்பி வெளியிட்டவர்களை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!!

   -MMH 
       திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இஸ்லாமியர்களின் உயிரிலும் மேலான நபிகள் நாயகத்தை அவதூறாக செய்தி பரப்பி வெளியிட்ட பிஜேபியை சேர்ந்த நூர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக திருப்பூர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் முஜிபுர் ரகுமான் தலைமை தாங்கினார். முன்னிலை மாவட்ட தலைவர் அப்துல் கையூம் மாவட்ட பொருளாளர் காதர் உடுமலை நகர செயலாளர் கமால்தீன் நூறு நகர தலைவர் அப்துல் ரகுமான் நகர பொருளாளர் கே எஸ் சலீம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை கழக பேச்சாளர் சலீம்கான் அவர்கள் கண்டன உரை இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் 500க்கும் மேற்பட்ட கலந்து கொண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.


-துல்கர்னி உடுமலை

Comments