பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் மக்கள் நலனுக்கான குறைகேட்பு முகாம்...!!!!

    -MMH 

   பொள்ளாச்சி நகராட்சியின்  12,17,18வது வார்டுக்குட்பட்ட மக்கள் நலனுக்கான குறைகேட்பு முகாம் பொள்ளாச்சியில் லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில் ஜூன் 22ஆம் தேதி புதன்கிழமை நேற்று மாலையில் நடைபெற்றது.

இந்த  முகாமில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு அப்பகுதியின் குறைகளை எழுதி மணுக்களாகக் கொடுத்தனர். இந்தக்  முகாமிற்கு பொள்ளாச்சி நகர மன்ற தலைவர், N. சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். 

மேலும் இந்த முகாமில் 12-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் E.R.பழனிச்சாமி ,  17-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் S.கந்தமனோகரி 18-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் K.கீதாலட்சுமி மற்றும் சா தர்மராஜ் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

-அலாவுதீன் ஆனைமலை.


Comments