வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை வேலைக்கு வைத்திருப்போர்களே கவனம்!!

   -MMH 

   ஜார்கண்ட், பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில்  வடமாநில தொழிலாளர்கள் தமிழ் நாட்டில் உள்ள முதலாளிகள் மீது வழக்குகள் பதிந்து 40-50 லட்சம் வரை நூதன முறையில்  பணம் பறித்து வரும் செய்தி தற்பொழுது தெரிய வந்துள்ளது. நிறுவனத்தில் கொடுமை படுத்துவதாகவும், சம்பளம் கொடுப்பதில்லை எனவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து வருகின்றனர். பணியிடத்தில் cellphone video மற்றும் photo எடுத்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள முதலாளிகள் மீது அந்த மாநில உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுப்பதால் சாதாரண சிவில் வழக்கு கிரிமினல் வழக்காக மாறி அந்த மாநில போலீசார் வந்து இங்கு உள்ள முதலாளிகளை கைது செய்கின்றனர். பாட்னா மற்றும் ராஞ்சி உயர்நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு முதலாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். வழக்கிலிருந்து விடுவிக்க பெரிய தொகை பேரம் பேசுகிறார்கள். தமிழ்நாட்டு சிறு, குறு தொழிலதிபர்கள் கவனமாக இருங்கள்.

தகவல்:

R மனோகரன், ESI & PF மற்றும் தொழிலாளர் சட்ட வழக்கறிஞர் (Twitter பதிவு).

-துல்கர்னி உடுமலை.

Comments