கோவை மாநகராட்சி உட்பட்ட பேரூர் ஜீரோ பாயிண்ட் பகுதியில் நேற்று இரவு ஆய்வு!!

   -MMH 

குறிச்சி பகுதியை சேர்ந்த தெற்கு மண்டல தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ,பேரூர் பகுதியில் அமைந்துள்ள ZERO POINT குடிநீர் பகிர்ந்து அளிக்கும் இடத்தில்  ஆய்வு மேற்கொண்டு, வாட்டர் போர்டு அதிகாரிகளிடம் பேசுவர்தை நடத்தி பல கட்ட போராட்டத்திற்கு பிறகு சிறுவாணி தண்ணீர் வரத்தை அதிகரித்து தந்துள்ளார்கள் .

இந்த ஆய்வில் தெற்க்கு மண்டல தலைவர் திருமதி தனலட்சுமி ரங்கநாதன் அவர்கள் , மற்றும் குறிச்சி வடக்குப்பகுதி பொறுப்பாளரும் 95 வார்டு மாமன்ற உறுப்பினருமான அண்ணன் எஸ்.ஏ.காதர், 100 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அண்ணன் இரா. கார்த்திகேயன் ,96 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அண்ணண் கே.பி.குணசேகரன் 98 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அண்ணண் உதயகுமார் , அவர்கள் மற்றும் 99 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு. அஸ்லாம் பாஷா,மற்றும் 85 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரளா வசந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

-செய்யத் காதர், குறிச்சி.

Comments