மகாராஷ்டிராவில் தொடரும் அரசியல் குழப்பம்!!

 

   -MMH 

   மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் ஆட்சிக்கு எதிராக, அதிருப்தி எம்.எல்.எக்கள் ஏக்நாத் ஷிண்டே அணியில் 46 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் 39 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் எனவும் எஞ்சிய 7 பேர் சுயேட்சைகள் எனவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் சிவசேனா தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை எனவும், அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரியும் மகாராஷ்டிரா ஆளுனரிடம் பாஜக கோரியுள்ளது. இதையடுத்து மராட்டிய அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா  சட்டசபையை சபாநாயகர் நாளை கூட்டி வாக்கெடுப்பு நடத்தி மாலை 5 மணிக்குள் சிவசேனா அரசு நம்பிக்கை தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என ஆளுனர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

-ஆர்.கே.பூபதி.

Comments