பாலியல் குற்றவாளிக்கு 14 ஆண்டு சிறை!

 

-MMH

கேரளாவின் பாலக்காட்டில் அமல்தேவ், 27, என்பவர் வசித்து வருகிறார். இவர், 2018 அக்டோபரில் ஐந்து வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாலக்காடு போலீசார் வழக்கு பதிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இந்நிலையில், பாலக்காடு மாவட்ட விரைவு சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி அமல்தேவ்க்கு, 14 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 1.10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இத்தொகையை சிறுமிக்கு அளிக்கவும், தவறும் பட்சம் மேலும், 15 மாத கடுங்காவல் தண்டனையை குற்றவாளி அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments