சர்வதேச டி20-ல் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசிய இளம் வீரர் கஸ்டவ் புதிய உலக சாதனை!!

  

வேட்டா டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசி சர்வதேச கிரிக்கெட் களத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் பிரான்ஸ் நாட்டு பேட்ஸ்மேன் கஸ்டவ் மெக்கென்  அவருக்கு வயது 18. அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் சாதனை மேல் சாதனைகளை படைத்து வருகிறார்.

எதிர்வரும் 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான ஐரோப்பிய துணை பிராந்திய தகுதிப் போட்டி பின்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது பிரான்ஸ் அணி. அந்த அணி கடந்த 25-ம் தேதி சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராகவும், 27-ம் தேதி நார்வே அணிக்கு எதிராகவும் விளையாடியது.

இந்த இரண்டு போட்டிகளிலும் மெக்கென் சதம் பதிவு செய்துள்ளார். சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக 109 ரன்களும், நார்வேவுக்கு எதிராக 101 ரன்களும் அவர் பதிவு செய்துள்ளார். அவர் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார். சுவிட்சர்லாந்துக்கு எதிராக சதம் விளாசியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்நிலையில், அதற்கடுத்த போட்டியில் நார்வேவுக்கு எதிரான போட்டியில் சதம் பதிவு செய்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசிய முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடி மொத்தம் 286 ரன்களை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது !!!

நாளைய வரலாறு  செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments