கிரெடாய் கோவை அமைப்பின் சார்பில் கோவையில் ஃபேர்புரோ 2022 கண்காட்சி!!

   -MMH 

 கிரெடாய் கோயம்புத்தூர், நடத்தும் ஃபோர்புரோ மெகா ரியல் எஸ்டேட் கண்காட்சி, ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள்,  வீடு வாங்குவோர் மற்றும் வங்கியாளர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது. வீடு வாங்க விருப்பம் உள்ள ஒவ்வொருவரும் தமது பட்ஜெட், இருப்பிடம் மற்றும் தேவைக்கு ஏற்ப தனக்கேற்ற கனவு இல்லத்தை தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் வீடு அல்லது வீட்டு மனைக்கு உடனடிக் கடன் வசதி அளிக்க பாரத ஸ்டேட் பேங்க் மற்றும் இதர வங்கிகள் ஸ்டால்களை அமைத்துள்ளன. இந்தக் கண்காட்சிக்கு ஒவ்வொரு வருடமும் மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.

இது குறித்து கோவை கிரெடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ, செயலாளர் ராஜீவ் ராமசாமி, கண்காட்சி தலைவர் சுரேந்தர் விட்டல் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, துணை பொது மேலாளர் மண்டல அலுவலக மேலாளர் திரு. இன்பரசு ஆகியோர் கூறியதாவது :- கோவை கிரெடாய் சார்பில் 12வது முறையாக கிரெடாய் ஃபேர்புரோ கண்காட்சியை கொடிசியா வளாகத்தில் வரும் ஜுலை 29 முதல் 31-ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், 75-க்கும் மேற்பட்ட ரெரா (RERA) அங்கீகாரம் பெற்ற புராஜெக்ட்களை காட்சிப்படுத்துகின்றனர்.

- சீனி,போத்தனூர்.

Comments