கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி செவிலியர் கல்லூரியில் 25 வது விளக்கேற்றும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!

 

     கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டபடிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் செவிலியர் மாணவர்களுக்கு மருத்துவமனை பயிற்சிக்கு செல்வதற்கு முன் செவிலியத் துறையின் முன்னோடியான ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூர்ந்து உறுதி மொழி மற்றும் விளக்கேற்றும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில் தாளாளார் சாந்தி தங்கவேலு மற்றும் நிர்வாக அறங்காவலர் அக்‌ஷய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியர் கல்லூரி முதல்வர் லிங்கராஜ் சித்ரா அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு செவிலியர் கழக பதிவாளர் ஆனி கிரேஸ் கலைமதி, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் 20 பட்டயப்படிப்பு 100 பட்டப்படிப்பு மாணவர்கள் விளக்கேற்றி உறுதி மொழி எடுத்தனர். அவர்களுக்கு முக்கிய விருந்தினர்கள்  செவிலிய மாணவ மாணவிகளுக்கு விளக்கேற்றி வைத்து நல்லாசி வழங்கினர் . இதனைத் தொடர்ந்து செவிலியத் துறைக்கு தங்களை அர்பணிப் பதற்கான பாடலை செவிலிய மாணவ மாணவிகள் பாடினர். தொடர்ந்து முனைவர்  கலைவாணி உறுதிமொழி கூற அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளும் உறுதிமொழி ஏற்றனர். இறுதியாக  முனைவர் ஜெயபாரதி, நன்றியுரை வழங்க தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

நாளைய வரலாறு செய்திக்காக

- சீனி,போத்தனூர்.


Comments