ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது புரோசோன் மால் கொண்டாட்டத்திற்கு 50 சதவீதம் வரை சலுகை மழை!

 

-MMH

2022 ஜுலை 22 முதல் 24 வரை மூன்று நாளட்களுக்கு நடைபெறுகின்றது. கோயம்புத்தூர், ஜூலை 20, 2022 - கோயம்புத்தூர் மக்களுக்கு ஒரு புதிய ஷாப்பிங் அனுபவத்தை 2017 ஜூலையில் துவங்கியது புரோசோன் மால். இந்த மாறுதல். அதுமட்டுமா, ஷாப்பிங் உடன், அறுசுவை உணவு, பொழுதுபோக்கு, அதோடு நிறைய விளையாட்டுக்கள், கேளிக்கைகள் என, இவற்றின் தலைநகரமாக மாறியது.                                                                                                                  தற்போது ஐந்தாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜூலை மாத இறுதியில் புரோசோன் மாலில் சலுகை மழையாக தள்ளுபடி வழங்கப்படுகின்றது. பாதிக்கு பாதி 50 சதவீத தள்ளுபடிகள்; கவர்ச்சிகரமான சலுகைகள், அதோடு, யுடியுபர்கள்,  இன்னிசை மழையில் சின்னத்திரை நட்சத்திரங்கள் மின்னுகின்றன. இன்னும் பல கொண்டாட்டங்கள் நடக்கவுள்ளன.

இது குறித்து புரோசான் மால் தலைவர் அம்ரிக் பனேஸர், மார்க்கெட்டிங் பிரிவு தலைவர்  பிரிங்டன் நாதன், செயலியக்க தலைவர் முசாமில் ஐ, செயலியக்கம் மற்றும் சந்தை பிரிவு தலைவர் சி.முரளி ஆகியோர் கூறியதாவது :- இந்த வாரத்தின் இறுதி நாட்களை புரோசோன் மாலில் கொண்டாடலாம் வாங்க. ஜூலை 22 முதல் ஜூலை 24 வரை பேஷன் ஷோ, திரைப்படங்கள், விளையாட்டுக்கள், அறுசுவை உணவின் அணி வகுப்புகளுடன் கொண்டாடலாம். ஷாப்பிங் செய்ய பல முன்னணி பிராண்டுகள் 50 சதம் வரை சலுகை தருகின்றன. லைப்ஸ்டைல், டாமி ஹில்பிகர், பீயிங் ஹ_மென் உள்ளிட்ட 70 க்கும் மேலான பிராண்டுகள் நம்ப முடியாத விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஸ்டைலான ஆடைகள், கவர்ச்சியான உடைகள், வெட்டுப்பட்ட டெனிம்கள், ஜீன்கள், எங்கும் கிடைக்காத பேஷன்களில் உங்களை அசத்தப்போகின்றன விற்பனை நிறுவனங்கள். அதுவும் மகளிருக்கென பிரத்யோக குர்தீஸ், சுடிதார், ஸ்விஷி ஸ்கர்ட்ஸ், டிரவுசர்கள் அதோடும் சிக்கென ஹேன்ட்பேக். உள்ளத்தில் மகிழ்ச்சி, உதட்டில் புன்னகையோடு அள்ளிச் செல்லலாம். இவற்றோடு இன்னும் இனாம்களும், பரிசுகளும் உண்டு.                                                                                                                      ஆம், ஷாப்பிங் செய்வோருக்கு ஐனாக்ஸ் திரையரங்கு டிக்கெட்டுகள், பரிசு கூப்பன்கள் பரிசாக கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கு காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாலில் இலவசமாக பார்க்கிங் செய்யலாம்; நாள் முழுவதும் ஷாப்பிங் செய்யலாம். விஜய் டி.வி., பிரபலங்கள் பங்கேற்கும் நேரடி பொழுது போக்கு காட்சிகள் வாடிக்கையாளர்களை அசத்தவுள்ளன. புகழ் பெற்ற அனுத்ருதம் பள்ளியின் நடனங்கள், மகிழ்ச்சியை அதிகப்படுத்தவுள்ளன. ஜூலை 22ல் பிரபல பின்னணி பாடகர்கள் நித்யாஸ்ரீ, ஆனந்த் அர்விந்தாக்ஸன்  நீங்கள் விரும்பும் பாடல்களை பாட உள்ளனர்.

ஜூலை 23ல் பிக்பாக்ஸ் புகழ் நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா,  அசத்தப்போகிறார். விஜய் டிவி சீசன் 3, ஏர்டெல் சூப்பர் சிங்கர் தன்யாஸ்ரீ, கவுசிக் பாடி அசத்தவுள்ளனர். அதோடு, புட்லூஸ் நடனக்குழு நடத்தும் ஆடை அலங்கார அணிவகுப்பு (பேஷன்ஷோ) மாலை வேலையில் மகிழ்ச்சியை அள்ளித்தரப்போகிறது. ஜூலை 24 ல், சினி நடிகர், விஜய் டிவி சின்னத்திரை நகைச்சுவை நடிகர் மதுரை முத்து பங்கேற்று அரங்கத்தை அதிர வைக்கப்போகிறார். இவரோடு இசைக்குழுவின் நடன நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. அசத்தலான இந்த கொண்டாட்டத்தை காண இப்போதே தயாராகுங்கள்; வாரநாட்களை ஷாப்பிங் குதுகலத்துடன் புரோசான் மால் அடியெடுத்து வைக்கும் ஐந்தாம் ஆண்டினையும் மகிழ்வோடு கொண்டாடுங்கள். பாதி விலையில் பொருட்களை மகிழ்வோடு வாங்கி அசத்துங்கள்.

- சீனி,போத்தனூர்.

Comments